பல ஆண்டுகள் லிவிங் டு கெதரில் வாழ்ந்த கமல் - கௌதமி... பிரிவதற்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
12 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் கௌதமியுடன் ஒன்றாக இருந்த கமல் - கௌதமியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
திருமணம்
கமல்ஹாசன் முதலில் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்ற பரதநாட்டிய கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு தான் 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். குழந்தைகள் பெற்றப் பின்னர் சரிகாவுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட அவரையும் விவாகரத்து செய்தார்.
கமல் - கெளதமி
இரு திருமணங்கள் செய்து இருவரையும் விவாகரத்து செய்த பின்னர் நடிகை கௌதமியை திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு கமலை விட்டு கௌதமியை பிரிந்து விட்டார்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |