லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் ஜனனி... பலநாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனி லியோ திரைப்படத்தில் நடித்த புகைப்படங்களை வெளியிட்டு பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார்.
பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர், இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.
இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளைப் பெற்று 70 நாட்களில் வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியேறிய பின் பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று வெளியான லியோ திரைப்படபுகைப்படங்களை அவரே பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து “தளபதி விஜய் கூட நடித்தது ஒரு கனவாக இருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். மேலும் இது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மற்றுமொரு விஷயம் @நடிகர்விஜய் (தளபதி) போட்டோ வந்தவுடன் வெளியிடுகிறேன்” என அவர் பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |