பிக்பாஸ் கொடுத்த அதிரடியாக சர்ப்ரைஸ்! கண்கலங்கிய கமல்ஹாசன்
பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து, வாழத்துக்களை தெரிவித்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இன்று ஷெரினா வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனி ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நாளைய தினம் பிறந்தநாள் என்பதால் பிக்பாஸ் வாழ்த்துக்களை கூறியதோடு, மேடையில் அவரை கேக் வெட்ட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ரசிகர்களின் கைதட்டல், பிக்பாஸ் மற்றும் போட்டியாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்த கமல்ஹாசன் நொடியில் கண்கலங்கியுள்ளார்.