கமல் கொடுத்த பரிசு... வெளியே வந்ததும் சொன்னதை செய்த ரியோ! காணொளியால் குஷியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரியோ கமலிடம் கூறியதை நிறைவேற்றி காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த சீசனினல் முதல் இடத்தை ஆரி வென்றார். இரண்டாவதாக பாலா மக்களின் வாக்குகளைப் பெற்று வந்துள்ளார். பொதுவாக இறுதி போட்டியின் போது கமல், இறுதி போட்டியாளர் அனைவர்களுக்கும் பரிசுகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் இறுதி போட்டிக்கு வந்த ஆரி, சீசனில் சோம் சேகர், ரியோ, ரம்யா ஆகிய ஐவருக்கும் கமல் பரிசு கொடுத்துள்ளார்.
அதில் ரியோவிற்கு கமல் டென்ட்டை கொடுக்க முக்கிய காரணம், ரியோ பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் வெளியில் வந்ததும் அவரது வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வந்ததும் தூங்கியதும் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ட்ரெக்கிங் போகவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதே போல தற்போது ரியோ ட்ரெக்கிங் சென்றுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘TO ANOTHER WORLD’ என்று விடியோவை பதிவிட்டுள்ளார்.
To another world ? pic.twitter.com/3n959bBvuU
— Rio raj (@rio_raj) January 28, 2021