நண்பர்கள் கொடுத்த பரிசைக் கண்டு திருமண மேடையில் கதறி அழுத மாப்பிள்ளை! வைரல்
நண்பர்கள் கொடுத்த பரிசால் மாப்பிள்ளை தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு, கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன்.
தந்தையை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் தேதி கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
இதன்பின்னர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இருவீட்டாரின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். மணமக்களுக்குப் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உறவினர்களும், மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நண்பர்கள் அறிவழகனின் தந்தையின் உருவப் படத்தைப் பேனரில் அச்சடித்து, அதனை சிறிய கட் அவுட்டாக வடிவமைத்து மாப்பிள்ளைக்குப் பரிசாக வழங்கினர்.
இதைக்கண்டு உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை அறிவழகன், திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத பரிசு அளித்த நண்பர்கள், அவரை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
[