கரம் கோர்ப்போம் நீதிக்கு! மாணவியின் மரணத்திற்கு முதல் நடிகராக குரல் கொடுத்த ஹரிஷ் கல்யாண்
சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவிக்கு நீதி கேட்டு பெரியளவில் போராட்டம் நடைப்பெற்றது. இதனால் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக 350 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

நீதிக்கு கைகோர்ப்போம்
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நம்புகிறேன். கரம் கோர்ப்போம் நீதிக்கு” என பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவிற்கு முதல் நடிகராக குரல் கொடுத்ததற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
#JusticeForSrimathi #Kallakuruchi
— Harish Kalyan (@iamharishkalyan) July 17, 2022
I hope whoever is responsible for her death is held accountable.
கரம் கோர்ப்போம் நீதிக்கு.