உண்மையாகவே மீனா கணவர் அப்படி தான் இறந்தார்! உண்மையை உடைத்தார் கலா மாஸ்டர்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் மீனா.
இவரைப்பற்றி சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். சமீப நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்டு மீண்ட மீனாவின் கணவர் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார்.
அவரின் இறப்புக்கு புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால், தான் சுவாசப்பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்டது.

இறப்புக்கு காரணம்
இந்நிலையில், மீனாவின் கணவர் உயிரிழந்தபோது ஆறுதலாக உடனிருந்து கவனித்துக்கொண்ட கலா மாஸ்டர், பேட்டி ஒன்றில் பேசுகையில், மீனாவின் கணவரின் மரணத்திற்கான காரணத்தை கூறியுள்ளார். அதன்படி, மும்பையில் புறா எச்சம் இருந்தால் சுவாசித்தாலே தப்பு என சொல்வார்கள்.

ஆனால், பெங்களூரில் அது அதிகமாகவே இருக்கும். இந்த எச்சத்தை சுவாசிப்பதால் சிலருக்கு தான் பிரச்சினை வரும். எதிர்பாராத விதமாக அந்த பிரச்சனை சாகருக்கு வந்து விட்டது என தெரிவித்துள்ளார்.
இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாகிவிட்டது என உலா வந்த தகவலை உண்மையாக்கியுள்ளார்.