கஜோலின் போலி வீடியோ: ரஷ்மிகாவிற்கு அடுத்து Target செய்யப்படும் கஜோல்
ராஷ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து தற்போது நடிகை கஜோலின் போலி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலி வீடியோ
வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நுட்பத்தின் காரணமாக மக்களுக்கு பல விதத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருகின்றது.
உண்மை எது, போலி எது, என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அபாயகரமாக உள்ளது.
அந்தவகையில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 'Deepfake Video' ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கத்ரீனாவின் ஒரு வீடியோவம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது எனலாம்.
காஜோலின் போலி வீடியோ
அந்த வீடியோவில் நடிகை கஜோல் தயாராகி வெளியே கிளம்புவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற போலியான வீடியோவை வெளியிட்டு வருவதால் இந்த தொழில் நுட்பத்தை தடை செய்ய வேண்டுயம் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.