நண்பனே நடுராத்திரியில் போன் செய்து! பிக்பாஸ் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
பிரபல நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி தனக்கு நடந்த தொல்லை குறித்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் பிரபலம்
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காஜல் பசுபதி. இதனைதொடர்ந்து ஒரு சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த காஜல், நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிய, சாண்டிக்கு வேறொரு திருமணமும் நடந்தது. தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வரும் காஜல் பசுபதி, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிக்பாஸில் கலந்து கொண்ட போதும் சில வாரங்களில் வெளியேற்றப்பட்டார், இந்நிலையில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசியுள்ளார். அதில், என்னுடைய தோழியின் காதலன் எனக்கும் நண்பன். பிரபல தொலைக்காட்சியில் முக்கியமான நபரை அவனுக்கு தெரியும்.
சீரியல்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக அவனிடம் கூறினேன், உன்னால் முடிந்த உதவியை செய் என்றும் கூறினேன்.
திடீரென நள்ளிரவு போன் செய்து, அசிங்கமாக பேசுகிறான், இப்படிபட்ட பெண் தேவை என்கிறான்.
அவன் ஏன் என்னிடம் அப்படி பேச வேண்டும்? அதிலிருந்து நான் அவனிடம் பேசுவதில்லை. அப்போதிருந்தே யாரிடமும் வாய்ப்புகள் கேட்டு செல்லவில்லை, வருகின்ற வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
சம்பள விஷயத்தில் வேண்டுமானால் சமரசம் செய்யலாம், வேறு எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.