தலிபான்களிடம் சிக்கிய காபூல்: உயிரைக் காப்பாற்ற விமானத்தில் தொங்கிய நபர்கள்! 2 பேர் அடுத்தடுத்து உயிரிழக்கும் சோக காட்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி பயணம் செய்த இரண்டு பேர் விமானம் உயரே பறந்தபோது தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் மாளிகையைக் கையகப்படுத்திய தலிபான்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இங்கு அசாதாரண சூழல் நிலவுவதால், காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தலிபான்களிடம் சிக்கிச் சாவதைவிட, வேறு ஏதாவது நாட்டுக்குத் தப்பிவிடலாம் என மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி சிலர் பயணிக்க முற்பட்டனர். விமானம் உயரே பறந்த சில நிமிடங்களிலேயே விமானத்திலிருந்து இருவர் கீழே விழும் காட்சிகள் அடங்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்கு உலக நாடுகள் தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த நாட்டின் மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. புறக்கணிக்கவும் கூடாது. அடுத்த வரும் சில நாட்கள் மிக முக்கியமானது என ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Three Kabul residents who were trying to leave the country by hiding next to the tire or wing of an American plane, fell on the rooftop of local people. They lost their lives due to the terrible conditions in Kabul. pic.twitter.com/Cj7xXE4vbx
— Tariq Majidi (@TariqMajidi) August 16, 2021