சுருண்டு விழுந்து இறந்த தமிழக கபடி வீரர்! சினிமா பாணியில் களத்தில் நடந்த துயரச் சம்பவம்!
கடலூரில் கபடி விளையாட்டின் போது தமிழக வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் மானடிக் குப்பத்தில் நேற்று முன்தினம் இரவு கபடி போட்டி நடந்தது.
இதில் பெரியபுறங்கணி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ் (22), தனது நண்பர்களுடன் கலந்துகொண்டார்.

சுருண்டு விழுந்த தமிழக கபடி வீரர்
வெற்றி பெற்ற பிறகு எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.
உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.