24 வயசுல இப்படி பண்ணிட்டானே! திடீர் தற்கொலை செய்த நடிகர்- வெளியான பல தகவல்கள்
பிரபல கானா பாடகர் ஹரியின் தற்கொலை குறித்து “காற்றுக்கென்ன வேலி” என்ற சீரியலின் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் ராகவேந்திரா முதல் முறையாக பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “காற்றுக்கென்ன வேலி” என்ற சீரியலில் கதாநாயகிக்கு தோழனாக கானா பாடகர் ஹரி நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து இவர் “தவமாய் தவமிருந்து” என்ற சீரியலில் பாண்டியன் திருமணத்தன் போது பாடப்பட்ட பாடல் கூட இவர் பாடியது தான்.
இவரின் தற்கொலை குறித்து பல பிரபலங்கள் தங்களின் ஆதங்களை பேசி வரும் நிலையில், அவருடன் இணைந்து நடித்த ராகவேந்திரா ஒரு சில பதிவுகளை கொடுத்துள்ளார்.
ஹரிக்கு இதனை அடிக்கடி கூறுவேன்
அதில், “ ஹரி படப்பிடிப்பு தளத்தில் கூட மிகவும் பிஸியாக இருப்பான். அவனின் எதிர்காலம் குறித்து அவனுக்கு அதிக பயம் இருந்ததது. அவனை என்னுடைய தம்பி போல் பார்த்தேன்.
ஆனால் 24 வயதில் அவன் செய்துக் கொண்டது எனக்கு கோபம் வருகிறது. சினிமா மட்டுமே வாய்ப்பு கிடையாது. நீ பாடுகிறாய் உனக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவனின் குடும்பத்தை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.
“காற்றுக்கென்ன வேலி” மற்றும் “தவமாய் தவமிருந்து” என இரு சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவன் மன அழுத்தில் இருந்தால் பாடல்கள் பாடி அதனை பதிவு செய்து இன்ஸ்கிராமில் போடு என அடிக்கடி கூறுவேன்.
ஆனால் அவன் தற்கொலை செய்துக் கொண்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என அழுதப்படி பேசியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து ஹரியின் மரணம் குறித்து பலர் தங்களின் பதிவுகளை கூறியிருக்கிறார்கள். இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரிக்கு பல திறமைகள் இருக்கிறது
அந்த வகையில் எழுத்தாளர் தீபா ஜானகிராமன் ஹரியின் மரணம் குறித்து முகநுாலில் சில பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில்,“ ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்து போது ஹரி என்னை பார்க்க வந்திருந்தார்.
அப்போது என்னிடம் எனக்கு நன்றாக பாட வரும் என்று கூறனார். தொடர்ந்து அவர் வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தையும் பாடிக் காட்டினார். அவரின் பாடல்கள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.
அதனால் தான் அவருக்கு என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நடிக்க வைத்தோம். நான்கதை எழுதும் போது சிச்சுவேஷனுக்கு பாட்டு வேண்டுமென்றால் உடனடியாக பாட்டு மெட்டுடன் வாட்சப்பிற்கு வரும். அந்தளவு திறமைச்சாலி ஹரி.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், “ வாய்ப்பு இல்ல மேடம். உங்க முன்னாடி ஜெயிச்சிட்டு வரணும்னு ஆசை. நீங்க படம் பண்ணா. எனக்கு நடிக்க வாய்ப்பு குடுங்க. அதுக்குள்ள ஜெயிச்சிடுவேன் ”என்றார்.
மேலும் , ஒரு போன் கால்ல ஒருத்தருக்கு எல்லாமே மாறிடும். அது தான் சினிமாவோட மேஜிக். அந்த போன் கால் எப்ப வேணாலும் வரும்.” என ஹரியிடம் கூறினேன்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த நெட்டிசன்கள், “ ஹரியின் பின்னால் ஏதோவொரு காரணம் இருக்கிறது” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.