அசீம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை...! காஜல் பசுபதி வெளியிட்ட பதிவு
அசீம் பிக்பாஸில் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என காஜல் பசுபதி தன்னுடைய பதிவில் வெளியிட்டுள்ளார்.
அசீம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாக இருக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார். ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
மேலும், அசீமுக்கு எதிராக பல சின்னத்திரை நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காஜல் பதிவு சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
காஜல் வெளியிட்ட பதிவு
அவர் வெளியிட்ட பதிவனாது,
உனக்கு எல்லாம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை தம்பி என்று கேப்ஷன் கொடுத்து அதற்கு கீழே அசீம் ஏன் ஏன் எனக் கேட்பது போன்றும், ஏன்னா நீ எல்லாம் ஜெயித்தால் தவறான உதாரணமாகிவிடும் டா சைக்கோ என்கிற வார்த்தையை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார்.
இவர் இவ்வாறு ஓபன் ஆக வெளியிட்ட இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பலருடைய பாராட்டலையும், வெறுப்பு எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
அதில் ரசிகர் ஒருத்தர் நீங்களும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியாமல் தானே வெளியே வந்து விட்டீங்க என கேட்க அண்ணா எவ்ளோ வேணா சீப்பா செஞ்சு ஜெயிக்க, யோசிக்க நான் உங்க அசீம் இல்லையே என்று பதிலளித்துள்ளார்.