டிவி நிகழ்ச்சியில் ரகசியமாக வீடியோ எடுத்து மாட்டிய தமன்! கலாய்க்கும் ரசிகர்கள்
கே.எஸ் சித்ரா அவர்கள் தன்னுடைய குரலால் அரங்கையே கட்டிப்போடும் வகையில் பாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது.
கே.எஸ் சித்ரா
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் பாடகிகளில் ஒருவர் தான் கே.எஸ் சித்ரா.
இவரின் குரலில் ஏகப்பட்ட பாடல்கள் வெளியாகி இன்றும் ரசிகர்கள் வாயில் முனுமுனுக்கப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
வாயடைச்சி போன அரங்கம்
குழந்தைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய நடுவர்களில் ஒருவராக இசையமைப்பாளரும் பாடகருமான தமனும் இருக்கிறார். இவர் இசையில் வெளியான “வாரிசு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் நடுவராக இருக்கும் கே.எஸ் சித்ரா ஒரு பாடலொன்றை பாடியுள்ளார். அவரின் குரலை கேட்ட அரங்கமே வாயடைச்சி போய் அமர்ந்திருந்தது.
மேலும் கே.எஸ் சித்ரா பாடும் பொழுது நடுவராக இருந்த தமன் தன்னுடைய கண்களை மூடி இசையை ரசிக்க ஆரம்பித்து விட்டார். இந்த காட்சியை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “காலங்கள் மாறினாலும் இது போன்ற குரலுக்கு மீட்டுக் கொடுக்கும் சக்தி இருக்கின்றது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.