44 வயதில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ஜோதிகா: அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விட்டாரா?
சினிமாவில் தனது முதல் ஆட்டத்தை முடித்து விட்டு இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி விட்டது போல ஜிம்மில் ஹெவி வேர்க்கவுட் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் ஜோதிகா.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜோதிகா. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவை கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார்.
தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
ஹெவி வேர்க் அவுட்டில் ஜோதிகா
இந்நிலையில், நடிகை ஜோதிகா ஜிம்மில் வேர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில், ஜோதிகா தலைகீழாக நின்று, ஹெவியான வெயிட் தூக்கி தாறுமாறாக உடற்பயிற்சி செய்திருக்கிறார்.
இவரின் இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட செய்திருந்த வேலையில், ஒரு சிலர் இவருக்கு 44 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், ஜோதிகா சினிமாவில் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆம்பிக்கத்தான் இப்படி உடம்பை தயார்ப்படுத்தி வருகிறார் என தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |