மாமனாரை விட்டுக் கொடுக்காமல் புகழ்ந்து தள்ளிய மருமகள்.. என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
ஜோதிகா வேண்டாம் என நினைத்த சூர்யா குடும்பத்திற்கு சிறந்த மருமகளாக ஜோதிகா பதிலடி கொடுத்துள்ளார்.
சூர்யா- ஜோதிகா திருமணம்
கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து பெற்றார்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணமாகிய கொஞ்சம் காலமாக “ ஜோதிகா வேண்டாம்” என சிவகுமார் எதிர்த்ததாகவும், சூர்யா அடம்பிடித்ததால் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைத்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின.
சூர்யாவை திருமணம் செய்த பின்னர் ஜோதிகா பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.
குடும்பம், குழந்தைகள் என பிஸியாக இருந்தார். இதனால் சினிமா வட்டாரங்கள் “ ஜோதிகாவை படங்களில் நடிக்க தடை போட்டு வில்லனாக மாறினார் மாமனார் சிவகுமார்” என பேசின.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா - சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இது குறித்தான சர்ச்சை கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இப்படியான வதந்தி கருத்துக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா ஒரு பேட்டியில் குடும்பம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ நான் வாழப் போன இடத்தில் எனக்கு ஆதரவாக இருப்பது என் மாமனார் தான். எதை பற்றியும் யோசிக்காமல் முழு கவனத்துடன் நடிக்க வேண்டும் என்பார்.
மேலும் அண்மையில் வெளியான காதல்- தி கோர் படத்தை தன் நண்பர்களுக்கு போட்டுக் காட்டி பெருமைப்பட்டார். வெளியில் வில்லன் போல் கூறப்படுபவர் வீட்டில் அவர் ஹீரோவாக தான் பார்க்கப்படுகிறார்.” என கூறியுள்ளார்.
அத்துடன், “நாங்கள் மும்பையில் செட்டிலாகவில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக மாத்திரம் தான் மும்பையில் இருந்து வருகிறோம். நான் சென்னையில் தான் இருக்கிறேன். ” என சூர்யா கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சூர்யா குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறிய போது, “ ஜோதிகாவை தான் வீட்டில் மாமியார் - மாமனார் புகழ்ந்து பேசுவார்கள். ஜோதிகாவை திருமணத்திற்கு முன் சூர்யாவின் அம்மாவிற்கு பிடிக்காது. ஆனால் தற்போது அவர் குடும்ப நிகழ்ச்சிகளில் ஜோதிகாவை தான் புகழ்ந்து பேசுவார்...” என கூறியுள்ளார்.
இப்படியாக சூர்யா - ஜோதிகா குடும்பத்தில் இருந்த அத்தனை சர்ச்சை கருத்துக்களுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ சிவக்குமார் இப்படியான ஒரு மனிதரா?” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |