பிலிம்பேர் விருது விழாவில் படு கிளாமரில் அதிரவிட்ட ஜோதிகா! வைரலாகும் புகைப்படம்
நடிகை ஜோதிகா 69 பிலிம்பேர் விருது விழாவிற்கு மாடர்ன் உடையில் வந்து ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.
நடிகை ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 2000 ஆம் ஆண்டுகளில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஜோதிகா.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவர், '36 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸ் சுற்றை ஆரம்பித்து நடித்து வருகிறது.
ஜாக்பாட், ராட்சசி, தம்பி, நாச்சியார் என பல முக்கிய படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
பெண்கள் தனது துறையில் சாதிப்பதற்கு திருமணமோ அல்லது வயதோ ஒருபோதும் தடைபோட முடியாது என்பதை பறைசாற்றி வருகின்றார். சமீபத்தில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடித்து அங்கும் பட்டையை கிளப்பி வருகின்றார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற 69வது பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் காதல் தி கோர் படத்துக்காக ஜோதிகாவுக்கு விருது வழங்கப்பட்டது.
குறித்த விருது விழாவுக்கு ஜோதிகா அணிந்து வந்த உடை இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. சிலர் இப்படி மாறிட்டேன்களே என்று எதிர்மறையாக விமர்சனம் செய்தாலும், இன்னும் சிலர் அந்த உடையில் ஜோதிகா அழகாக இருக்கிறார், அதில் ஆபாசம் தெரியவில்லை என நேர்மறை விமர்சனங்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |