முத்தத்திற்காக அரங்கேறிய சண்டை... விக்னேஷ் சிவனை சைக்கோ என்று திட்டிய நயன்தாரா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம்வரும் விக்னேஷ் சிவனை நயன்தாரா சைக்கோ என்று சண்டையிட்டுள்ள சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
நயன்தாரா விக்கி ஜோடி
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனைக் கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி, தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக வலம்வருகின்றனர். ஆனால் திருமணத்திற்கு முன்பு நயன்தாரா விக்கியை சைக்கோ என்று சண்டையிட்டது தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதிக்கும், நயன்தாராவிற்கு முத்தக்காட்சி ஒன்று படமாக்க இருந்த போது, நயன்தாரா இதை மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் விக்னேஷ் மிகவும் சரியாக இந்த காட்சி வர வேண்டும் என்பதற்காக நயன்தாராவை, கிட்ட வாங்க... இன்னும் கிட்ட வாங்கனு சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.
இதனால் கோமடைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் அருகில் வந்து சைக்கோனு சொல்லி திட்டிவிட்டு சென்றாராம். வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்ததாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |