திருமலை படத்தில் ஜோதிகாவிற்கு முன்பு இந்த நடிகை நடித்தாரா? பல ஆண்டுகள் கழித்து உடைந்த உண்மை
நடிகர் விஜய் நடித்த திருமலை படத்தில் ஜோதிகாவிற்கு முன்பு நடிக்கவிருந்த நடிகையை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் திருமலை
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் திருமலை. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார்.
பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இப்படத்தின் பாடல்கள் மட்டுமின்றி காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் தற்போதும் மறக்கமுடியாததாகும்.
ரமணா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ஜோதிகாவிற்கும் இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஜோதிகாவிற்கு முன் எந்த நடிகை?
ஆனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் தேர்வானது ஜோதிகா இல்லை என்றும் நடிகை நம்ரதா ஷிரோத்கர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் தெலுங்கு திரையுலனின் முன்னணி நடிகரான வலம் வரும் மகேஷ் பாபுவின் மனைவி ஆவார். இவரை வைத்து தான் ஆரம்பத்தில் படம் எடுத்துள்ளனர். ஆனால் இயக்குனர் ரமணாவிற்கு அது திருப்தியளிக்காத காரணத்தினால் அவரை நீக்கிவிட்டு நடிகை ஜோதிகாவை நடிக்க வைத்தாராம்.
நம்ரதா தமிழில் இப்படத்தில் அறிமுகமாக இருந்த நிலையில், அது கைகூடவில்லை. பின்பு தமிழ் சினிமா பக்கம் வராமல், நடிகர் மகேஷ் பாபுவை திருமணம் செய்து சினிமாவை விட்டே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |