படிக்காதவன் பட குட்டி ரஜினி திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சூரிய கிரண் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சூரிய கிரண்
தமிழ் சினிமாவில் மௌன கீதங்கள், படிக்காதவன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் தான் சூரிய கிரண்.
இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் சிறு வயதில் நடித்து வந்தாலும், சூர்ய கிரண் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
பின்பு சில படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து முடித்துள்ள அரசி படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். நடிகர் சூரிய கிரண் சமீப காலமாக உடல்நிலை குறைவினால் அவதிப்பட்டுள்ளார்.
மஞ்சள் காமாலை காரணமாக ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோயின் தாக்கம் அதிகரித்ததால், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு உயிரிழந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 48 வயதில் இயக்குனராக கலக்கியவர் திடீரென உயிரிழந்துள்ளது திரைத்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.