காதல் கணவனுடன் சேர்த்து சம்பாதித்தது இவ்வளவு தானா? அசரவைக்கும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜோதிகா. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தற்போது முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார்.
தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற வேளையில், அவரின் சொத்து மதிப்பு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன் திரையில் ஜொலித்த ஜோதிகா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்து ஒரு திரைப்படத்திற்கே 4 இலிருந்து 5 கோடிக்கு சம்பளம் வாங்குகிறார். அது மட்டுமில்லாது விளம்பரங்களில் நடித்து ஆண்டுக்கு 20 இலிருந்து 30 கோடி வரைக்கும் வருமானம் பார்க்கிறார்.
இது தவிர சூர்யாவுடன் இணைந்து படங்களையும் தயாரித்து வருகிறார். சென்னையில் ஒரு பிரமாண்ட வீட்டை கட்டியிருக்கிறார். மும்பையிலும் 70 கோடிக்கு பிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதுபோக சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அப்படி இப்படி என்று பார்த்தால் மொத்தமாக 330 கோடி வரைக்கும் சொத்து இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |