தலைகீழாக தொங்கும் ஜோதிகா! வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகையே இவரது நடிப்பு திறமையால் கலக்கி வந்தார்.
திருமணம்
இதனை தொடர்ந்து “காக்க காக்க” திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பிய ஜோதிகா தற்போது சினிமாத்துறைக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ஜோவின் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ள நிலையில் வைரலாகியும் வருகின்றது.