பிரபல பாப் பாடகருக்கு நேர்ந்த துயரம்! முகம் செயலிழந்து வெளியிட்ட காட்சி
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பருக்கு திடீரென அரிய வகை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனடா பாப் பாடகர்
கனடா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர். 28 வயதான ஜஸ்டின் பெய்பர் தொடக்கக் காலத்தில் யூடியூப் மூலம் பாடல்களைப் பாடி உலகெங்கும் பிரபலமானவர்.
உலகில் இப்போது இருக்கும் முக்கிய பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஜஸ்டின் பெய்பருக்கு மோசமான உடல்நல்கோளாறு ஏற்பட்டுள்ளது.

திடீர் பக்கவாதம்
முகத்தின் ஒரு பாதியைச் செயலிழக்கச் செய்யும் அரிய வகை பக்கவாத நோய்ப் பாதிப்பால் பாடகர் ஜஸ்டின் பெய்பர் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் விரைவில் நடைபெற இருந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார். இந்த பக்கவாத நோய் காரணமாக ஜஸ்டின் பெய்பரின் முகத்தின் ஒரு பகுதி முகம் செயலிழந்துள்ளது.
ஜஸ்டின் பெய்பர் ராம்சே ஹன்ட் என்ற ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த வகை நோய் முக முடக்குதலை ஏற்படுத்துகிறது. முகத்தில் இருக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது. இதனால் முகத்தின் குறிப்பிட்ட பகுதிகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. அப்படி தான் ஜஸ்டின் பெய்பருக்கு முகத்தின் வலதுபுறம் செயலிழந்து உள்ளது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கும் வகையில் ஜஸ்டின் பெய்பரே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வருத்தத்தில் ஜஸ்டின் பெய்பர்
இது தொடர்பாக ஜஸ்டின் பெய்பர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அடுத்தடுத்து நான் எனது நிகழ்ச்சிகளை ரத்து செய்வதால் எனது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளது எனக்குப் புரிகிறது. நான் உடல் ரீதியாக, இப்போது இசைக் கச்சேரிகளை நடத்த முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு இப்போது மிகவும் சேர்வாராக இருக்கிறது. நீங்கள் எனது உடல்நிலையைப் புரிந்து கொள்வீர்கள். என்னால் முகத்தின் வலது பக்கத்தை கண்டிரோல் செய்ய முடியவில்லை.
ஒரு பக்கம் முழுவதும் முடங்கி உள்ளது. இதற்காக இப்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். நான் இதில் இருந்து எப்போது குணமடைவேன் என எனக்கு என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், முழுமையாக குணமடைய எனக்கு முழு ஓய்வு தேவை. எனவே தான், நான் இசைக்கச்சேரிகளை ரத்து செய்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறேன்" என்றார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் 14 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.