இரவு நேரம் சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்து பாருங்களேன்! 5 வகையான நோய்கள் கட்டுபடுத்தப்படுமாம்
பொதுவாக நாம் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் உணவு எடுத்துக் கொண்ட பின்னர் நடப்பது மிகவும் அரிதாகி வருகிறது.
இதனால் தான் கொலோஸ்ரோல் பிரச்சினை, இரத்த அழுத்தம், அதிக எடை, சமிபாடு பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும் இது குறித்த மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், இரவு நேரங்களில் சாப்பாட்டிங்கு பின்னர் கட்டாயமாக 2 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டுமாம்.
இவ்வாறு செய்வதால் பல நோய்கள் கட்டுபடுத்தப்படுகிறதாம். இதனை தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் நீரழிவு நோய்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பவற்றை கட்டுகோப்பில் வைக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் இரவு வேளைகளில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
இரவு வேளைகளில் நடப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
1. உடற்பயிற்சி மற்றும் நீரழிவு நோய் கட்டுபடுத்தப்படல்
இரவு நேர சாப்பிற்கு பின்னர் சுமார் 2-5 நிமிட மெதுவான நடைபயிற்சி செய்வதால் உடலிலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். இதனால் நீரழிவு நோயின் வீரியம் குறையும்.
மேலும் இது போல நடைப்பயிற்சிகளிலால் இரத்தயோட்டம் மேம்படுத்தப்பட்டு சாப்பாட்டிலுள்ள குளுக்கோசு உடல் முழுவதும் கொண்டு செல்லப்படும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.
2.மந்த நிலை
தினமும் இரவு நேரங்களில் சாப்பிட்டு விட்டு நடக்காமல் அப்படியே சென்று தூங்கியனால் உடல் விரைவில் ஒய்வடையாமல் காணப்படும்.
இதனால் காலையில் ஒரு புத்துணர்ச்சியே இல்லாமல் சோம்பலாக இருக்கும். இதனால் நமது வேலைகளை காலையில் முறையாக செய்ய முடியாது. இது போன்ற பிரச்சினைகளை தடுப்பதற்காகவே இரவில் நடக்க வேண்டும்.
3.வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்பொருமல்
தினமும் 2 - 5 நிமிடங்கள் நடப்பதால் உடல் நன்றாக இயங்கும், சமிபாட்டு பிரச்சினைகளும் சீர்ப்படுத்தப்படும். இதனால் ஏற்படும் வாயுத்தொல்லை, வயிற்றுப்பொருமல் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நாம் நடக்கும் நடையானது, உடலில் ஒரு அசைவை ஏற்படுத்தி செரிமான மண்டலத்தின் இயக்கத்தை தூண்டுகிறது.
4. தூக்கம்
உடலுக்கு முறையான ஓய்வு கிடைக்க வேண்டும் என்றால் நடக்க வேண்டும். இது போன்ற தொடர் உடற்பயிற்சியால் “இன்சோம்னியா” என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை பிரச்சினையை சரிச் செய்யப்படுகிறது.
மேலும் உடல் ஓய்வில்லாமல் வேலைச் செய்துக் கொண்டிருப்பதால் தான் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு முறையாக மருத்துவரிடம் சென்று பார்த்துக் கொள்வது அவசியம்.
5. மன ஆரோக்கியம்
இரவு வேளைகளில் சிறிது நேரம் நடப்பது ஒரு மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறையாகும். இவ்வாறு செய்வதால் மன அழுத்தம், மன பதற்றம் மற்றும் மன சோர்விலிருந்து விடுபட உதகிறது.
ஏனெனில் நடைப்பயிற்சி, மன அழுத்தத்தை உருவாக்கும் அட்ரலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பதை தட்டுப்படுத்துகிறது.