குரு பெயர்ச்சியால் வரும் கோடி யோகம் ! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் யார்?
கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள குரு பகவான் பூச நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்திற்கு மாறியுள்ளதால், ஜூலை 19 வரை சில ராசிகள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகப்போகின்றது.

குருப்பெயர்ச்சி
ஜோதிடத்தில் அறிவு, செல்வம், திருமணம் மற்றும் குழந்தைப் பாக்கியத்திற்கு அதிபதியாகக் கருதப்படும் குரு பகவான், 2026 ஜூலை 4 அன்று கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். ஜூலை 19 வரை இந்த நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம், குடும்ப நலன் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றது.

ரிஷபம் - குருவின் நட்சத்திர மாற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை மற்றும் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையும். தூரப் பயணங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் திட்டங்கள் வெற்றியடையும். பொருளாதார நிலை மேம்படும்.

கடகம் - குரு உச்ச நிலையில் இருப்பதால் செல்வாக்கும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் வேகமாக நிறைவேறும். வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

கன்னி - குரு கோச்சாரத்தால் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய பாக்கிகள் மற்றும் கடன்கள் வசூலாகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் மரியாதையும் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்கு சாதகமான காலம். சமூகத்தில் மதிப்பும் முக்கிய நபர்களின் ஆதரவும் அதிகரிக்கும்.

விருச்சிகம் - குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டமும் பாக்கியமும் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு அங்கீகாரமும் முழு பலனும் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு உயரும். வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் தூரப் பயணங்களில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வு, உயர் அதிகாரிகளின் பாராட்டு மற்றும் ஆதரவு கிடைக்கும்.

மீனம் - குருவின் பெயர்ச்சியால் கல்வி, போட்டித் தேர்வுகள், பிள்ளைகளின் நலம் மற்றும் முதலீடுகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். காதல் உறவுகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க இது மிகவும் சாதகமான காலமாக அமையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).