குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் நிலை 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் கிரக மாற்றங்களால் குறிப்பிட ராசியினருக்கு சாதக பலன்கள் ஏற்படும் அதே நேரம் ஒருசில ராசியினருக்கு பாதக விளைவுகளையும் கொடுக்கும்.
இந்துமத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிரகங்களில் குரு பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்ப்படுகின்றது. செல்வ செழிப்பை வழங்குகின்ற கிரமாகவே இது பார்க்கப்படுகின்றது.
ஒருவருடையை ராசியில் குரு பகவான் உச்சம் பெற்றால், அவர்களின் வாழ்வில் பணத்துக்கும் ஏனைய செல்வங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில், குருபெயர்சியால் அதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
2025ஆம் ஆண்டில் நிகழவுள்ள குரு பெயர்ச்சியால், மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு இடப்பெயர்ச்சியர்ச்சியடைவுள்ளார்.
அதனால் மேஷ ராசியினருக்கு அமோக பலன்கள் உண்டாகும். புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கு நீண்ட நாள்கள் செய்த முயற்சி இந்த ஆண்டில் நிறைவேறும்.
குருவின் முழுமையான ஆசீர்வாதம் இருப்பதால், உயர் சம்பளத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கைகூடிவரும்.
2025 ஆம் ஆண்டு முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. இவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் வருமானம் ஈட்டும் வாய்ப்பு அமையும்.
மிதுனம்
குரு பெயர்ச்சியால் 2025 இல் மிதுன ராசியில் பிறந்தவர்கள் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை பெறப்போகின்றார்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். புதிதாக திருமணம் செய்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
திருமணத்துக்காக காத்திருப்போருக்கு மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும்.சமூதாயத்தில் மதிப்பும் மரியாதையும் தானாக உயரும்.
தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படும். அடுத்த ஆண்டில் நிதி நிலை எதிர்பார்ப்பை விடவும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு காணப்படுகின்றது.
சிம்மம்
2025 இல் சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் பெயர்ச்சியடைவதால், தொழில் மற்றும் குடும்ப வாழ்களை சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகளுக்கு தீர்வு கிடைப்பதுடன் இணக்கமான சூழல் உருவாகும்.
இந்த ராசியினருக்கு தொழில் ரீதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. வருகின்ற ஆண்டில் நிதி நிலையில் உச்ச பலன்களை அனுவிப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |