குருவின் நட்சத்திர மாற்றம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் நேர்மறையான கிரகமாக அறியப்படுகிறார்.
அதனால்த குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியனின் ராசி மாற்றம் போலவே நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிலைபெற்றுள்ளார், ஆனால் செப்டம்பர் 20 ஆம் தேதி குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழைகிறார்.
அதன்பின் அக்டோபர் 08 ஆம் தேதி வரை அதே நிலை நீடிப்பார். இந்த நட்சத்திரம்கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் நட்சத்திரமாகும்.
குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைவது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுடன், பணப் பிரச்சினைகளும் குறையும்.
வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு நிறைவேறும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வாகனம், சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த காலகட்டம் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.
விருச்சிகம்

குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் நிறைந்த காலமாக அமையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணியில் இருப்பவர்கள் சாதனைகள் படைக்கவும், மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறவும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு முக்கியமான ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கலாம். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். தொழில், சமூக அந்தஸ்து, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம்.
திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உயர் பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டு. வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |