2027ல் மூன்று முறை நிகழும் குரு பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 4ராசிகள்!
Jupiter to Change Signs Three Times in 2027: வருகின்ற 2027 ஆம் ஆண்டில் குரு பகவான் மூன்று முறை தனது ராசியை மாற்ற உள்ளார். இந்தப் பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையும் நேர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்தும் என ஜோதிடம் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். இவர் பொதுவாக ஓராண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், 2027ஆம் ஆண்டில் குரு பகவான் மூன்று முறை ராசி மாறுகிறார். தற்போது சிம்ம ராசியில் இருக்கும் குரு, ஜனவரி மாதத்தில் கடக ராசிக்கும், ஜூன் மாதத்தில் மீண்டும் சிம்ம ராசிக்கும், நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்.
இந்த மூன்று பெயர்ச்சிகளும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

2027ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி கடக ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். தொழிலில் வளர்ச்சியும் எதிர்பாராத வழிகளில் பணவரவும் கிடைக்கும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளுடன் புதிய பொறுப்புகளும் வந்து சேரும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.கலைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக முடிவெடுக்கவும். சேமிப்பு மற்றும் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்

2027ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்குப் பணவரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சேமிப்பில் ஆர்வம் அதிகரிப்பதுடன், பொருளாதார நெருக்கடிகளும் குறையும்.
நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தைகள் சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
அரசு வழியிலான உதவிகள் கிடைக்கும். புதிய கருவிகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடல்நலப் பாதிப்புகள் குறைந்து, கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி

2027ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி கன்னி ராசியினருக்குப் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீடுகள் செய்வீர்கள்.
அக்கம் பக்கத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள்.
நீண்ட காலப் பிரச்சனைகள் குறைந்து, புதிய வாய்ப்புகள் தேடி வரும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலம் மற்றும் வீடு தொடர்பான விரிவாக்க முயற்சிகள் சாதகமாக அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |