குரு–சூரியன் சேர்க்கையால் உருவான சிவ ராஜயோகம் - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறுவதுடன், பிற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில், தற்போது தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதேவேளை, கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும் சமீபத்தில் கடக ராசியில் நுழைந்துள்ளார். இதன் விளைவாக, குரு–சூரியன் சேர்க்கையால் சிவ ராஜயோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தில் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சிவ ராஜயோகம், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, நிதி நிலை, தொழில், கல்வி என அனைத்திலும் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

குரு மற்றும் சூரியன் இணைவால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம், மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
நீண்ட காலமாக புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அது இந்த காலகட்டத்தில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.
கடகம்

குரு மற்றும் சூரியன் சேர்க்கையால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம், கடக ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன்களை வழங்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து, எந்த செயலிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
தொழிலில் புதிய முன்னேற்றங்களும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
விருச்சிகம்

குரு மற்றும் சூரியன் உருவாக்கியுள்ள சிவ ராஜயோகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை வழங்கும்.
குறிப்பாக வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில் அல்லது வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளுக்காக தீவிரமாக தயாராகும் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகள் சுமுகமாக முடிவடைந்து மனநிம்மதியை அளிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகி, தொழில் மற்றும் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |