குருப்பெயர்ச்சியால் கதறப்போகும் ராசிகள் - 5 ராசிகளில் உங்க ராசி இருக்காணு பாருங்க
குருப்பெயர்ச்சி குறிப்பிடட் ராசிகளுக்கு சாதகமாகவே இருந்தாலும் சில சிக்கல்களையும் கொடுக்கக்கூடும்.

குருப்பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் குருப்பெயர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஜூன் 2ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தார்.

குருப்பெயர்ச்சி பல ராசிகளுககு நன்மைகளை அள்ளி கொடுப்பது ஒரு பக்கம் இருக்க சில கிரகங்களின் மாற்றத்தால் பாதகமான விளைவும் உண்டாகும்.
இந்த நிலையில் எந்த ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி பாதக பலனை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வேலை மற்றும் வருமானத்தில் புதிய வாய்ப்புகளை தரும் ஆனால் அதை சரிவர செயற்படுத்துவது அவசியம். வெளிநாடு அல்லது தொலைதூர பணியிட வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருந்தாலும், செலவுகள் கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு உள்ளது. சேமிப்பில் சிரமம் உருவாகலாம்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், சம்பள உயர்வு, எதிர்பாராத லாபம் போன்ற சாதகங்கள் கிடைக்கலாம். சமூக வட்டாரம் விரிவடையலாம். ஆனால் சொத்து மற்றும் உறவினர்கள் தொடர்பான பிரச்சனைகள் உங்களை வந்து சேரும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகாரம், அங்கீகாரம் மற்றும் தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது. நல்ல தொடர்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகம். ஆனால் கடுமையாக உழைத்த பணிக்கு தகுந்த பலன் தாமதமாக தான் கிடைக்கும். குடும்ப கருத்து வேறுபாடுகள் மனநிறைவை சீர்குலைக்கும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகமாக இருந்தாலும், திடீர் செலவுகள் உருவாக்கலாம். அதே நேரத்தில் தம்பதியர் உறவு மற்றும் துணைவர் உடல்நிலை தொடர்பாக கவனம் தேவைப்படலாம்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை முன்னேற்றம், சம்பள உயர்வு, உடல்நலம் மேம்பாடு போன்ற பலன்கள் கிடைக்கலாம். உறவுகளில் மனஅழுத்தம், கருத்து வேறுபாடு மற்றும் எதிர்பாராத செய்திகள் மனநிலையை பாதிக்கலாம். எனவே இந்த குரு பெயர்ச்சி காலத்தில் லாபத்தையும், எச்சரிக்கையையும் சமநிலையுடன் பேணுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).