12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!
ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறுபவர்.
செப்டம்பர் 07 அன்று சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் நுழைகிறார். ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் கடகத்தில் பயணித்து வருவதால், சந்திரன்-குரு சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் இணையும் சந்திரன்-குருவின் இந்த கஜகேசரி ராஜயோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
அப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிப்பதன் மூலம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய வருமானத்துக்கான வழிகள் தானாக உருவாகும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தைவிட அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.
பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேலும், வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும்.
இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்

மீன ராசியின் 5-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
எழுத்து மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, சிறப்பான வெற்றியையும் பெறுவார்கள்.
பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |