சிம்ம ராசியில் இணையும் குரு - செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்களின் நிலைக்கும் 12 ராசிகளின் வாழ்க்கைக்கு நேரடி தொடர்ப்பு உண்டு.
அந்தவகையில், தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். இவர் அறிவு, அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.

தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் குரு பகவானுடன், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் இணையவுள்ளார். செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.
நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த இரு கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், இவ்விரு கிரகங்களும் 2027 மார்ச் மாதம் வரை ஒன்றாகப் பயணிக்கவுள்ளன. இந்த கிரகச் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள் எனப் பல நன்மைகனை வாரி வழங்கப்போகின்றது.
அப்படி சிம்ம ராசியில் நிகழும் குரு, செவ்வாய் சேர்க்கையால் வாழ்வில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் அந்த 3 ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 5-ஆவது வீட்டில் குரு, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, தொடங்கும் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
பணிபுரிபவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வணிகர்களுக்குப் புதிய நட்புகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.
இருப்பினும், நிதி முடிவுகளைச் சிந்தித்துச் செயல்படுவதுடன், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபமும், தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியும் ஏற்படலாம்.
இருப்பினும், பெரிய முதலீடுகளை அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து மேற்கொள்வது அதிக லாபத்தைப் பெற உதவும். இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகள் பெரியளவில் வெற்றியை கொடுக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 7-ஆவது வீட்டில் குரு, செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், வேலையை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன், கூட்டுத் தொழில் மூலம் நல்ல லாபமும் கிடைக்கலாம். இருப்பினும், பண விஷயங்களில் அவசரப்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. இந்த காலகட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |