குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும்.
வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும். குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.
தனுசு

தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
கும்பம்

கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம்.
நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |