பளபளப்பான சருமத்திற்கு அரிசியை பயன்படுத்தும் 3 சிறந்த வழிகள்
பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கொரியன் பியூட்டி முறைகள் தற்பொழுது பிரபலம் அடைந்து வருகின்றது.
அதனால் சரும பராமரிப்பில் அரிசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதாவது அரிசியில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின் மற்றும் சருமத்தை அமைதிப்படுத்தும் சேர்மங்கள் நம்முடைய சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், அரிசியை ஊற வைத்து அல்லது வேகவைத்து கிடைக்கும் அரிசி நீர், அரிசி மாவு மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாறு போன்ற பல்வேறு வடிவங்களில் நாம் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.

அதை பயன்படுத்துகின்ற பொழுது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் மந்தமான தோற்றத்தை போக்கவும் சருமத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. இந்த அரிசி ஒரு மென்மையான இயற்கை உரிப்பு பொருளாகவும் செயல்படுகிறது.
அதனால், நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது. இந்த அரிசியை எப்பேர்பட்ட சரும வகைகளுக்கு நாம் பயன்படுத்தலாம். அந்த வகையில், நாம் இந்த அரிசியை கொண்டு முகத்தை பொலிவு படுத்தக்கூடிய ஒரு 3 முறை பற்றி பார்ப்போம்.
1. அரிசி நீர்:
அரிசி நீர் என்பது சரும பராமரிப்பில் அதிக நன்மைகளை வழங்க கூடிய இடம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் பொலிவையும் தன்மையையும் படிப்படியாக மேம்படுத்துகிறது.
அரிசியை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது வேகவைத்தால் கிடைக்கக்கூடிய நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் புளிக்க வைக்கலாம். பிறகு புளிக்க வைக்கும் முறையில் சில இயற்கை சத்துக்கள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்களின் அளவு அதிகரிக்கக்கூடும்.
பிறகு, தயாரான அரிசி நீரை ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து முகத்தில் தினமும் தெளித்து பயன்படுத்தலாம். இது நமக்கு புத்துணர்ச்சியையும் சருமத்தை ஈரப்பதத்துடனும் வைப்பதற்கு உதவுகிறது.

2. சரும பொலிவிற்கு :
அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் கடலை மாவு அல்லது தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கலாம். வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த பேஸ்ட் நமக்கு சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.
அதோடு அதில் இருக்கக்கூடிய கடலை மாவு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது.
தயிர் நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த கலவையை நாம் முகத்தில் சீராக தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் மெதுவாக கழுவலாம். பிறகு நம்முடைய முகம் பொலிவாக இருப்பதையும் புத்துணர்ச்சி இருப்பதையும் பார்க்க முடியும்.
3. அரிசி நீர் ஐஸ் கட்டிகள்:
கோடை காலங்களில் அரிசி நீரில் தயாரிக்கப்படும் அந்த ஐஸ் கட்டிகள் முகத்திற்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி நம்முடைய ஐஸ் கட்டி தயாரிக்க கூடிய அந்த தட்டில் ஊற்றி ஊற வைக்கலாம்.
பிறகு உறைந்த அந்த ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் தேய்க்காமல் அதற்கு பதிலாக மென்மையான துணியில் சுற்றி உதட்டில் மெதுவாக பயன்படுத்துவது குளிர்ச்சியான தன்மை முகத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தையும் சருமத்திற்கு தற்காலிகமான புத்துணர்ச்சிகளையும் கொடுக்கும்.

முக்கியக் குறிப்பு:
இவையெல்லாம் இயற்கையான பொருட்கள் என்றாலும் அனைவரது சருமமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆதலால் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக சிறியதாக ஒரு பகுதியில் பயன்படுத்தி பரிசோதனை செய்த பிறகு முகத்தில் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தலாம்.
மேலும், வீடுகளில் தயாரிக்கும் அரிசி நீர் போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல் சுத்தமான முறையில் குறுகிய நாட்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பை கொடுக்கும். வெறும் சரும பராமரிப்பு மட்டும் எப்பொழுதும் பாதுகாக்காது.
போதுமான தண்ணீர் சுத்தமான உணவு சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்தல் ஆரோக்கிய உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் தேவை இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுதல் இவையெல்லாம் முறையாக பின்பற்றும் பொழுது தான் நாம் நினைத்த சருமத்தை அடைய முடியும்.