ஜோதிடத்தில் படி தற்போது குரு பகவான் கடகத்தில் நுழைவதால் மூன்று ராசிகளுக்கு பலவித நன்மைகள் உண்டாகும்.
கடகத்தில் நுழையும் குரு
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் பெயர்ச்சி அடைந்து ஒரு ராசியின் பலனை அப்படியே மாற்றி அமைக்கும். இதில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும்.
அந்த வகையில் தற்போது கடக ராசிக்குள் குரு பகவான் நுழைகிறார். இது மூன்று ராசிகளுக்கு நற்பலனை தரப்போகின்றது. இந்த ராசிக்காரர்கள் பதவி மற்றும் கௌரவத்தைப் பெறலாம்.
அதே நேரத்தில், சிக்கிய பணத்தைக் திரும்பவும் பெறலாம். இந்த கொத்தான அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு கிடைக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

கடக ராசி | - குருவின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
- குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து லக்னத்திற்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார்.
- இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் மற்றவர்களிடம் நல்ல விதமாக அறியப்படுவீர்கள்.
- புதிதாக திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- வேலை செய்யும் பணியாளர் பலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளத்தில் பல நன்மைகள் கிடைக்கும்.
- காதல் உறவில் நீங்கள் இருந்தால் அந்த உறவு மேன்படும்.
|
துலாம் ராசி | - குருபெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும்.
- குரு உங்கள் ராசியிலிருந்து தொழில் மற்றும் வணிகத்தின் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார்.
- உங்களுக்கு நல்ல புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள்.
- தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை சந்திப்பீர்கள்.
- இந்த நேரத்தில், உங்கள் புகழ் அதிகரிக்கும், மேலும் மக்கள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள்.
- பழைய முதலீடு செய்து இருந்தால் அதில் நிறைய லாபம் கிடைக்கும்.
|
விருச்சிக ராசி | - குருபெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்கள் சாதகமான பலன் கிடைக்கும்.
- குரு உங்கள் ராசியிலிருந்து அதிர்ஷ்ட வீட்டில் பெயர்ச்சி அடைவார்.
- இந்த நேரத்தில், உங்கள் அதிர்ஷ்டம் உயரும்.
- நீங்கள் வேலை-தொழில் நிமித்தமாகவும் பயணம் செய்யலாம்.
- வேலையில் பதவி உயர்வு மற்றும் மரியாதை கிடைக்கும்.
- திருமணம் நடக்கலாம்.
- மத சார்ந்த விடயத்தில் ஈடுபடுவீர்கள்.
- திடீர் பண லாபத்தை பெறலாம்.
- அதே நேரத்தில், குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம்
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)