வியாழன், சுக்கிரனின் சேர்க்கையால் ஷடாஷ்டக் யோகம்! 3 ராசிகள் ஜாக்கிரதை
வியாழன் மற்றும் சுக்கிரன் கிரகங்களின் சேர்க்கையால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
குரு சுக்ர ஷடாஷ்டக் யோகம் ஜோதிட கணிப்பு:
ஒருவரது வாழ்க்கையில் செழுமை மற்றும் ஆடம்பரம், மகிழ்ச்சி இவற்றிற்கு காரணமாக கிரகம் தான் சுக்கிரன் மற்றும் வியாழன். இவற்றிற்கு இடையே ஷ்டாஷ்டக் யோகம் உருவாகப் போகின்றதாம்.
அறிவு மற்றும் செல்வத்திற்கு காரணமாக இருக்கும் வியாழன் மற்றும் வீனஸ் ஒருவருக்கொருவர் 6 மற்றும் 8 வது வீட்டை நோக்குவார்கள்.
சுக்கிரன்-வியாழனின் இந்த ஷடாஷ்டக் யோகம் நாளை உருவாகும் நிலையில், சில ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை தெரிந்து கொள்வோம்.
ஷடாஷ்டக் யோகம் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் பார்க்கும்போது உருவாகிறது.
மேஷம்:
மேஷ ராசிக்கு ஷடாஷ்டக் யோகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அசுப யோகத்தின் காரணமாக உடல்நலம் பாதிப்பு ஏற்படும். வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படலாம்.
கன்னி:
கன்னி ராசியைப் பொறுத்தவரையில், வியாழன்-சுக்கிரனின் இந்த ஷடாஷ்டக் யோகம் அசுப பலனை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பதுடன், காதல் வாழ்க்கையில் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். பண விடயத்திலும் நிலைமை எதிர்மாறாக இருக்கலாம். எச்சரிக்கை தேவை.
மீனம்:
மீன ராசியினர்கள் இந்த யோகத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். தடைகள் உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியம், பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படவும்... சிக்கலை சந்திப்பார்கள். பணியிடத்திலும் எச்சரிக்கை தேவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |