குரு, சந்திரன் சேர்க்கை... ராஜயோகத்தினை தட்டித்தூக்கும் 3 ராசியினர் யார் யார்?
குரு மற்றும் சந்திரன் இரண்டு கிரகங்களின் சேர்க்கையினால் எந்தெந்த ராசியினருக்கு ராஜயோகம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் சேர்க்கை
குரு மற்றும் சந்திரன் இரண்டும் சக்தி வாய்ந்த கிரகங்களாக ஜோதிடத்தில் பார்க்கப்படும் நிலையில், இவற்றின் சேர்க்கையினால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது.
இதனால் சில ராசியினருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் நிலையில், இந்த சேர்க்கையானது வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு கிரகங்களும் மிதுன ராசியில் பிரவேசிக்கும் போது, சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாகின்றது. கஜகேசரி யோகத்தில் அனைத்து ராசியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் நிலையில், குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதீத பலன்கள் கிடைக்கின்றது. அவற்றினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த கஜகேசரி ராஜயோகத்தினால் பல நன்மைகள் கிடைக்கும் நிலையில், வாழ்க்கையில் நல்லதொரு வளர்ச்சியையும் பெற முடியும். பண பிரச்சனை நீங்குவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த குரு மற்றும் சந்திரன் சேர்க்கையினால் சிறப்பான நன்மைகள் கிடைக்கின்றது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்குமாம். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம், வியாபாரத்தில் நல்ல வெற்றியும் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த கஜகேசரி யோகத்தால் பொற்காலம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இவர்களின் கடின உழைப்பு நல்ல பலனை கொடுப்பதுடன், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் கிடைக்கின்றது. விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |