இந்த ராசியினரை யாராலும் புரிந்துக்கொள்ளவே முடியாதாம்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை,எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயப்பிலேயே சற்று மர்மமான இயல்பு கொண்டவர்களாகவும், மற்றவர்களால் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படி மற்றவர்களின் பார்வையில் எப்போதும் ஒரு புரியாத புதிராகவே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான இயல்புக்கும் ரகசிய தன்மைக்கும் பிறவிலேயே பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் இருந்து ஒரு விடயத்தை வெளிக்கொண்டுவருவது யாருக்கும் முடியாத காரியமாக இருக்கும். இவர்களிடம் ஒரு ரகசியம் சொன்னால் உயிரைவிடும் வரையில் அதை பாதுகாப்பார்கள்.
தனிப்பட்ட விடயங்களை மிகவும் நெருக்கமானவர்களிடம் கூட எளிதில் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்கள் பற்றிய விடயங்களை மற்றவர்கள் புரிந்துக்கொள்வா கடினமாக்கிவிடுகின்றது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தங்களின் சுதந்திர இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் தாங்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் சற்று அதிகமாக இருக்கும்.
ஆனால் பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு கட்டுபடுவதை போல் தோற்றமளித்தாலும், உண்மையில் இவர்கள் நினைக்கும் வகையில் தான் ஒரு விடயத்தை நடத்திக்கொண்டிருப்பார்கள்.
புரிந்து கொள்ள கடினமாக இருப்பவர்கள் பட்டியலில் கும்ப ராசி முக்கிய இடம் பிடிக்க காரணம் இவர்களின் இந்த குணங்கள் தான். இவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது.
மீனம்

மீன ராசிக்காரர்களின் கலைத்தன்மைக்கும் கற்பனை ஆற்றலுக்கும் இயல்பிலே திறமைபெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் வாழும் வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவதை விடவும் கற்பனையில் ஆசைப்பட்ட வாழ்ககையை அனுபவிப்பதில் தான் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் நடத்தையை வெகு சிலரால் மாத்திரமே புரிந்துக்கொள்ள முடியும். சாதாரணமாக பார்கும் போது இவர்கள் ஒரு விடயத்தை கவனிப்பது போல் தோன்றினாலும் இவர்களின் சிந்தனை ழுழுவதும் வேறு விடயத்தில் இருக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |