உருகி உருகி மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்... வெளிச்சம் போட்டு காட்டிய ஜாய் கிறிஸ்டில்லா
கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் உருகி உருகி அனுப்பிய மெசேஜை ஜாய் கிறிஸ்டில்லா பத்திரிக்கையாளரிடம் காண்பித்து ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவினை கடந்த 2023ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
ஆனால் இவரது திருமண விவகாரத்தினை வெளியே விடாமல் இருந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தினார் ஜாய்.

இதன் பின்பு ரங்கராஜ் வாழ்க்கையில் பெரும்புயல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். தற்போது ஜாய் தனது குழந்தையை குறைபிரசவத்தில் பெற்றெடுத்தார்.
தற்போது கிரிசில்டா வைத்திருக்கும் குழந்தைக்கு தான் தந்தை இல்லை என்றும் தன்னை மிரட்டி அவ்வாறு கூற சென்னதாக தெரிவித்தார்.

ஜாய் கிரிசில்டா
இந்நிலையில் ஜாய் கிரிசல்டா வீல் சேரில் நடக்கமுடியாமல் வந்ததுடன், பத்திரிக்கையாளரையும் சந்தித்துள்ளார். அப்பொழுது தான் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு தயார் என்று கூறியுள்ளார்.
தற்போது தனது குழந்தை குறைமாதத்தில் பிறந்துள்ளது என்றும் தான் அவ்வப்பொழுது சென்று தான் குழந்தையை பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் ஐ லவ் யூ பொண்டாட்டி என்றும் தான் செத்தாலும் உனது மடியில் தான் இருப்பேன் என்று உருகி உருகி அனுப்பிய குறுந்தகவலை ஜாய் செயியிட்டுள்ளார்.
தான் அவரிடம் பணத்திற்கு இவ்வாறு செய்வதாக கூறுகின்றனர். பணத்திற்காக செய்பவளாக இருந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக சென்றுவிடுவேன்... இவ்வாறு போலிஸ் ஸ்டேஷன், மீடியா என்று நிற்க மாட்டேன் என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
மேலும் தனது குழந்தை சாபம் சும்மாவிடாது என்றும் தான் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு தயார் என்றும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |