மாதம்பட்டி ரங்கராஜ் இப்படியும் செய்வாரா? ஜாய் கிரிஸில்டாவின் பரபரப்பு பதிவு!
தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை வீழ்த்துவதற்காக ஒரு கூட்டணியே வைத்து வேலை செய்து வருவதாக குறிப்பிட்டு, ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகிவருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் கிரிஸில்டா தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.
ஜாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேரிடமும் தீவிரமான விசாரணை நடைபெற்றது. அந்த சமயத்தில்தான் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் சூழலில் ரங்கராஜ் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர்; இந்த போராட்டத்தில் வென்றுவிட்டதாகவே பலரும் கருதினார்கள்.

ஆனால் ரங்கராஜோ செம ட்விட்ஸ் கொடுக்கும் வகையில் இந்த திருமணம் மிரட்டலின் பேரில் தான் நடைபெற்றது தான் DNA பரிசோதனைக்கு தயார் என அறிக்கை வெளியிட்டார். குறித்த அறிக்கை இணைத்தள வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து அவர் குறிப்பிட்டது போல் DNA பரிசோதனைக்கும் செல்லாமல் தற்போது வரையில் ஏமாற்றி வருகின்றார். இந்நிலையில் ஜாய் கிரில்டா, வெளியிட்டுள்ள பதிவில் மாதம்பட்டி ரங்கராஜ் பணபலத்தை வைத்துக்கொண்டு தனக்கு பல்வேறு வகையிலும் தெந்தரவு கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
