பிக் பாஸிருந்து வெளியேறிய பின்பு வனிதாவை சந்தித்த ஜோவிகா! Airport-ல் முத்தத்தை பரிமாறிய தருணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜோவிகா தனது தாய் வனிதாவை சந்தித்த முதல் காட்சி இன்ஷ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
நேற்றைய தினத்தில் ஜோவிகா வெளியேறிய நிலையில், அவர் செல்லும் முன்பு கமலிடம் பேசும் இந்த வாரம் வெளியேறிவிடுவேன் என்ற எண்ணம் தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டது.
ஏற்கனவே ஜோவிகாவின் அம்மா வனிதா தனக்கு முகத்தில் அடிபட்டு இருப்பது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஜோவிகாவிற்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் சோகமாக இருக்கிறார் என்று சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதன்முதலாக தனது தாய் வனிதாவை விமான நிலையத்தில் சந்தித்து அன்பை பரிமாறியுள்ளார். இக்காட்சி வைரலாகி வருகின்றது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |