வெளியில் வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ஜோவிகா.. போஸ்ட் போட்டு உறுதிப்படுத்திய பிரபலம்!
வெளியில் வந்த ஜோவிகா அடுத்த என்ன செய்ய போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியானார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டிகள் கொஞ்சம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
அடுத்த வேலையை ஆரம்பித்த ஜோவிகா
வெளியில் வந்த ஜோவிகா முதலில் தன்னுடைய அம்மாவை சந்தித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகளை வனிதா விஜயகுமார் அவருடைய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை தொடர்ந்து இவர் நடிகர் பார்த்திபனுடன் உதவி இயக்குநராக பணிபுரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு போஸ்ட் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் வீட்டில் ஓய்வாக இருப்பார் என்று பார்த்தால் அடுத்த வேலையை ஜோவிகா ஆரம்பித்து விட்டார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் ஆதரவான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Offical Update ✅
— Sekar ? (@itzSekar) December 5, 2023
BiggBoss #Jovika is working as Assistant Director to Actor/Director Parthiban? #BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggBoss pic.twitter.com/XfXmAetPZC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |