ஜோவிகா ஏன் அப்பா பெயரை பயன்படுத்தவில்லை? வனிதா விஜயகுமார் விளக்கம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கும் ஜோவிகா தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார் .
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த உடனேயே தனது கருத்துக்களை தைரியமாகவும் உரத்த தொனியிலும் கூறியதால் இணையதளவாசிகள் மத்தியில் பேசு பொருளாகவும் மீம் கிரியேற்றர்களுக்கு சிறந்த மெட்ரிரியலாகவும் மாறியிருக்கின்றார்.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகளாகிய ஜோவிகா தனது பெயரின் பின்னாலும் ஜோவிகா விஜயகுமார் என பயன்படுத்துவது குறித்து இணையதளத்தில் பல்வேறு சர்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளது.
வனிதாவின் விளக்கம்
இதற்கு பதிலடியாக வனிதா தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில் கரீனா கபூர், அமீர்கான், சல்மான்கான் இவங்களையெல்லாம் கேட்காத கேள்வி ஜோவிகா பற்றி மட்டும்தான் கேட்கிறீங்க... அதைப் பற்றி விளக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாரும் குடும்ப பெயரை பயன்படுத்துவது குடும்ப வழக்கமாகவும் அதே நேரத்தில் சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலையாலும் கூட அந்த மாதிரி வைக்க வேண்டிய நிலைமை வருகிறது. நான் ஜோவிகா பிறக்கும்போது ஆகாஷோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாகத்தான் இருந்தேன்.
ஆகாஷ் தான் ஜேவிகாவின் தந்தை ஆனால் சூழ்நிலை காரணமாக என்னுடைய பெயருக்கு பின்னாடி வரும் என்னுடைய அப்பா பெயரை ஜோவிகாவிற்கு வைத்தேன் என்று அந்த வீடியோவில் வனிதா பேசி இருக்கிறார். தற்போது இது காட்டு தீ போல் இணையத்தளத்தில் பரவிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |