பரபரப்பை கிளப்பிய ஜோவிகா! வைரலாகும் கோபிநாத்தின் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்வி முக்கியமில்லை என சொன்ன நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘படிப்பு ரொம்ப முக்கியம்...கோபிநாத் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவிவருகின்றது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீசனில் விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா,கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வனிதாவின் மகள் ஜோவிகா...
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளது பார்வையாளர்களின் ழுழு கவனத்தையும் வனிதாவின் மகள் ஜோவிகா பெற்றுள்ளார். இதற்கு கல்வி முக்கியமில்லை என விசித்ராவை வெளுத்து வாங்கியதே காரணம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்வி முக்கியமில்லை என சொன்ன நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் கல்வி குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜோவிகா, தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9 ஆம் வகுப்புடன் நின்று விட்டதாக சொல்லியிருந்தார். ஆனால் இதைக்கேட்ட சக போட்டியாளரான நடிகை விசித்ரா, குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு வரையாவது கல்வி கற்க வேண்டியது அவசியம் என அறிவுரை கூறினார்.
அதனால் ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் சண்டை வெடித்தது அப்போது, “ படிப்பு எல்லாம் முக்கியமில்லை, வாழ்க்கையில் படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு ஒரு கட்டாயமும் இல்லை என்ற கருத்தை ஜோவிகா தெரிவித்திருந்தார். இது இணையத்தல வாசிகள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பல நடவடிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசுசெயல்பட்டு வரும் நிலையில், ஜோவிகாவின் கருத்து சுமாராக படிக்கும், அல்லது தனக்கு படிப்பு வரவில்லை என நினைக்கும் நபர்களை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதனை கமல் கண்டிக்க வேண்டும் என்றெல்லாம் கருத்துகள் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் பிரபல தொகுப்பாளர் நீயா, நானா கோபிநாத் கல்வி குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.
#BiggBossTamil7 வீட்டில் #Jovika "படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல" என்று சொன்னதற்கு நிறைய பேரு?விடுகிறார்கள். #Vichithra சொன்ன முறை வேண்டுமானால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கலாம்.. ஆனால் படிப்பு முக்கியம் என்ற அவரின் உட்கருத்தில் எந்த… pic.twitter.com/pcgFqoIcBq
— Surya Born To Win (@Surya_BornToWin) October 6, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |