viral video: நாய்களுக்காக பத்திரிகை அடையாள அட்டையை வெட்டி ராஜினாமா செய்த பெண் நிருபர்!
தெருநாய்கள் தடுப்புக்காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் பிரியங்கா தத் தனது பத்திரிகை அடையாள அட்டையை வெட்டி ராஜினாமா செய்த காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் இல்லாத தெருக்களை உருவாக்க வேண்டும்' என அண்மையில் உச்ச நீதிமன்றம், அதிரடியாக உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து பரவலாக இந்த விவகாரம் தொடர்பாக இணையவாசிகள் தொடங்கி விலங்கு நல ஆர்வலர்கள் உட்பட பலரும் விவாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது தெரு நாய்களுக்கு ஏற்படப்போகும் சோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் பிரியங்கா தத் தனது பத்திரிகை அடையாள அட்டையை வெட்டி ராஜினாமா செய்துள்ள காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
Republic TV journalist Priyanka Dutt cuts and spits on her press id to resign in protest against stray dogs detainment. pic.twitter.com/IPhb0Pj55R
— PRAPANCH xpress (@Prapanchxpress) August 13, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |