பாரம்பரிய அடையாளத்துடன் சாதித்த முதல் பழங்குடியின பெண்! உலகில் இதுவே முதன்முறை
உலகில் முதன்முறையாக தன்னுடைய பாரம்பரிய அடையாளத்துடன் செய்தி வாசித்து சாதனை படைத்துள்ளார் Oriini Kaipara என்ற பழங்குடியின பெண்.
Māori பழங்குடியினத்தை சேர்ந்த பெண் Oriini Kaipara, இவர்கள் தங்களது பாரம்பரிய அடையாளமாக முகத்தில் உதட்டுக்கு கீழே பச்சை குத்திக் கொள்வது வழக்கம்.
நியூசிலாந்தின் பிரதான செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் Oriini Kaipara, முதன்முறையாக செய்திகளை வாசித்து சாதனை படைத்துள்ளார்.
2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், தான் 100 சதவிகிதம் Māori பழங்குடியினத்தை சேர்ந்த பெண் என்பதை தெரிந்து கொண்டதால் பச்சைக் குத்திக் கொண்டதாக தெரிவிக்கிறார் Oriini Kaipara.
இது தனக்கும், தன்னுடைய இனத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய மரியாதை என நெகிழும் Oriini Kaipara, முதன்முறையாக செய்தியாளராக தன்னுடைய பணியை தொடங்கிய போது தனக்கு தேவையான உதவிகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கிறார்.
இந்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக Oriini Kaiparaக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
