அனிருத்தை திருமணம் செய்ய போகும் இளம் பாடகி யார் தெரியுமா? மேடையில் கூறிய ருசிகர தகவல்
இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்து கொள்வேன் என்று பாடகி ஜோனிடா காந்தி தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் இசையமைத்த விக்ரம் படம் வெற்றி நடை போட்டு வருகின்றது.
இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது.
இளம் பின்னணி பாடகியின் ஆசை
சமீபத்தில்கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறி இருந்தார்கள்.
ஆனால், அது முற்றிலும் பொய் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளம் பின்னணி பாடகி அனிரூத்தை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தார்.
அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு அவர், இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் அனிருத்தும் ஜோனிட காந்தி இருவரும் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.