Jodi: Are U Ready 2-ல் கோப்பையுடன் பல லட்சத்தை தட்டித்தூக்கிய ஜோடி- எவ்வளவு தெரியுமா?
12 ஜோடிகளுடன் துவங்கிய Jodi: Are U Ready 2 டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்பட்ட பரிசு மற்றும் பரிசுத்தொகை பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Jodi: Are U Ready 2
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Jodi: Are U Ready 2.
இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் ரியோ மற்றும் ஏஞ்சலின் இருவரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
12 ஜோடிகளுடன் ஆரம்பமாகிய Jodi: Are U Ready 2, நிகழ்ச்சி நேற்றைய தினத்துடன் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.
டைட்டில் வின்னரின் பரிசுத்தொகை
இந்த நிலையில், இறுதிச் சுற்றில் ஐந்து ஜோடிகள் பங்குப்பற்றினார்கள். நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்ற அபினவ் மற்றும் ராணிக்குமாரி இருவரும் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டனர்.
அபினவ் மற்றும் ராணிக்குமாரி இருவருக்கும் வெற்றி கோப்பையுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் சின்னத்திரை ரசிகர்கள் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |