ரூ.10 லட்சம் நகை, ரூ.3 லட்சம் பணம் திருட்டு: ரவி மோகன் வீட்டில் பரபரப்பு!
நடிகர் ரவி மோகன் வீட்டில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் நடிகர் ரவி மோகன் தன்னுடைய நடிப்பு திறமையாலும், பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்த திரைப்படங்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம், அவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலான புகழையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது. இதனால் அவரது திரைப்பட வாழ்க்கை தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்றதாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் சினிமா வாழ்க்கையில் சிறப்பாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தனது மனைவி ஆர்த்தியுடனான பிரிவு தொடர்பான செய்திகள் மற்றும் அதனைச் சுற்றிய விவாதங்கள் தொடர்ந்து ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் மனைவியைப் பற்றிய சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்தால் இணையத்தில் பரப்பபு ஏற்பட்டது.

அதன்பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்தது சரியானதல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது கருத்துகளுக்காக மன்னிப்பும் கேட்டு அறிகை வெளியிட்டிந்தார்.

இந்நிலையில், தற்போது புதிய சர்ச்சையாக, நடிகர் ரவி மோகனின் வீட்டில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருடுபோனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |