பாக்கியாவை அவமானப்படுத்திய ஜெனி... பதில் கூற முடியாமல் திகைத்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் செழியனால் வீட்டை விட்டு சென்ற ஜெனியிடம் சமாதானம் பேசுவதற்கு சென்ற நிலையில் அவரை அவமானப்படுத்தி சத்தம் போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார். தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.
தற்போது செழியன் மாலினி விவகாரம் ஜெனி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த நிலையில், ஜெனி அவரது தாய் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பாக்கியாவை சத்தம் போட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ராதிகா இருந்து வருகின்றார். இந்நிலையில் ஜெனியை சந்திக்க பாட்டியுடன் அவரது வீட்டிற்கு பாக்கியா சென்றுள்ளார்.
ஆனால் ஜெனி கோபத்தில் பாக்கியாவை சத்தம் போட்டு அனுப்பியுள்ளார். மேலும் அவரது வாழ்க்கையை காரணம் காட்டி கடுமையாக பேசி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |